நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்; கண்டறிவது எப்படி? #COPD | #VisualStory

Share

breathing

மூச்சுக்குழாயில் நீண்ட நாள்களாக அடைப்பு ஏற்பட்டு, சுவாசித்தல் சிரமமாகும் பிரச்னையே `நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்’ (Chronic Obstructive Pulmonary Disease – COPD).  

அறிகுறிகள்: ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளும் தெரியாது. நோயின் பாதிப்பு முற்றிய நிலையில்தான் அறிகுறிகள் வெளிப்படும்.

மூச்சு விடுவதில் சிரமம், வீசிங், நெஞ்சில் இறுக்கம்,  நுரையீரலில் அதிக அளவு  சளி சேர்வது, தொண்டையில் அடைப்பு, தொடர் இருமல், வெள்ளை, மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் சளி வருதல்.

உதடு மற்றும் நகங்கள் நீல நிறமாக மாறுதல், அடிக்கடி நுரையீரல் நோய்த்தொற்று ஏற்படுதல், ஆற்றல் இல்லாத உணர்வு, நாள்பட்ட நிலையில் உடல் எடை இழப்பு.

காரணங்கள்:  இந்த நோய்க்கு, சிகரெட் புகையே முக்கியக் காரணம். மரபியல் ரீதியாகவும் இப்பாதிப்பு ஏற்படலாம்.  ஆஸ்துமா நோயாளி சிகரெட் புகைக்கும்போது, இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

நோய் பாதிப்பு அறிய: ஸ்பைரோமெட்ரி பரிசோதனையில் நுரையீரலின் செயல்திறன் கண்டறியப்படும். இதன் மூலம் நுரையீரலுக்கு எவ்வளவு காற்று, என்ன வேகத்தில் செல்கிறது என்பதை அறியலாம். தவிர, மார்பக எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் மூலமாகவும் கண்டறியலாம். 

நோயை தடுக்க: சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும்.  ஒருவர் புகைத்துவிடுகின்ற புகையைச் சுவாசிக்க நேரிடும் சூழலை தவிர்க்க வேண்டும்.

புகை நிறைந்த சூழலைத் தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் புகை சூழலைத் தவிர்க்க முடியாதவர்கள், உரிய தடுப்பு நடவடிக்கை எடுத்துக்கொள்வது அவசியம். 

விறகு அடுப்பை தவிர்க்க வேண்டும். அடுப்புப் புகை சமையல் அறையில் தங்காமல் வெளியேறும் வசதி வேண்டும். காலையில் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

COPD நோயைக் குணப்படுத்த முடியாது. ஆரம்பநிலையில் கண்டறிந்தால், பாதிப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம். நோய் வளரவிடாமல் தடுக்க, இன்ஹேலர் பரிந்துரைக்கப்படும். சத்தான உணவு, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com