`திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்…’
சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் தனது பேச்சுகுறித்து மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி அளித்துள்ள விளக்கத்தில் கூறுகையில், “டெல்லி தேர்தலில் எனது பிரசாரத்தில் நான் பேசியதை சொந்த விருப்பத்துக்காக சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கணக்கில் நிலவும் சாதி வித்தியாசங்களை தாண்டி ஒவ்வொரு இந்தியரையும் சமமாக பார்க்கவேண்டும் என்பது பாபாசாகேப் முன்வைத்த பெருங்கனவாகும். இந்த சமத்துவத்தின் ஒருபகுதியாகத்தான் பட்டியலின மக்களை முன்னேறிய வகுப்பினர் பாதுகாக்கவேண்டும் எனவும், முன்னேறிய வகுப்பினரின் விவகாரங்களில் பட்டியலின மக்கள் பங்கெடுக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன்.

`முழுமையாக ஒளிபரப்ப வேண்டும்..’
எனது இந்த பேச்சை தவறான லட்சியத்துடன் திரித்து வெளியிட்ட சில மீடியாக்கள், எனதுபேச்சை முழுமையாக ஒளிபரப்பி தைரியத்தை காட்டவேண்டியது அவசியமானதாகும். பா.ஜ.க-வுடன் உள்ள உங்கள் வைராக்கியமும், என் மீதான கோபமும் எனது திருச்சூருக்கும், கேரள மக்களுக்கும் சேவை செய்ய தூண்டுகிறது.
நீங்கள் இன்று பட்டியலின மக்களுக்கு எதிரானவன் என சித்திரிக்கும் சுரேஷ்கோபிதான் வயநாட்டிலும் இடுக்கி இடமலக்குடியிலும் பட்டியலின மக்களுக்காக குரல்கொடுத்த அதே சுரேஷ்கோபி எனபதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும்” என சுரேஷ்கோபி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பட்டியலின மக்கள் நலனை கவனித்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு எனவும். எங்கள் கட்சிதான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கியது. நான் கூறியதை எனது வார்த்தைகள் இதயத்திலிருந்து வந்தவை. நல்ல நோக்கத்துடன்தான் நான் அப்படி பேசினேன் எனவும் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.