‘நடந்தது முடிந்து போன விஷயம். அதனால்…’- WCL குறித்து பிரட் லீ கருத்து!

Share

வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் (WCL) பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் விளையாட மறுத்துவிட்டனர்.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  பிரெட் லீ கருத்து தெரிவித்திருக்கிறார். 

“நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட் தொடரில் விளையாட வந்துள்ளோம்.

நேற்று நடந்தது முடிந்து போன விஷயம். அதனால் இந்த தொடரில் அடுத்து என்ன என முன்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்” என கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com