சென்னை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக விதிமுறைகளின்படி, கடந்த 21, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் நடந்த, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தலில், பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தலைமைக் கழகம் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி தேனி மாவட்ட நிர்வாகிகள்: மாவட்ட அவைத்தலைவராக பொன்னுப்பிள்ளை, மாவட்ட செயலாளராக சையதுகான், மாவட்ட இணை செயலாளராக மஞ்சுளா, மாவட்ட துணை செயலாளர்களாக வசந்தா, சற்குணம், மாவட்ட பொருளாளராக சோலைராஜ், பொதுக்குழு உறுப்பினர்களாக சிவக்குமார் (கம்பம்), சேட் ப. அருணாச்சலம் (ஆண்டிப்பட்டி), மு.சிவக்குமார் (பெரியகுளம்), ஏ.சுப்புராஜ் (எ) அரண்மனை சுப்பு(போடி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அவை தலைவராக ஜெயபிரகாசம், மாவட்ட செயலாளராக ராஜேஷ், மாவட்ட இணை செயலாளராக கிருஷ்ணவேணி, மாவட்ட துணை செயலாளர்களாக லட்சுமி, செந்தில்குமார், மாவட்ட பொருளாளராக கணேசன், பொதுக்குழு உறுப்பினர்களாக அண்ணாமலை (ஆர்.கே.நகர்), செல்வராணி (பெரம்பூர்), வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அவை தலைவராக எத்திராசன், மாவட்ட செயலாளராக வெங்கடேஷ்பாபு, மாவட்ட இணை செயலாளராக சரஸ்வதி நந்தகுமார், மாவட்ட துணை செயலாளர்களாக கு.ஜான்சிராணி வெங்கடேசன் மாவட்ட பொருளாளராக தங்கம் ஆ.துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர்களாக மு.ராமமூர்த்தி (வில்லிவாக்கம்), கிளாரா (கொளத்தூர்),
வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட அவை தலைவராக கண்ணன், மாவட்ட செயலாளராக பாலகங்கா, மாவட்ட இணை செயலாளராக குமாரி நாராயணன், மாவட்ட துணை செயலாளர்களாக வள்ளி, ஆவின் சு.அருள்வேல், மாவட்ட பொருளாளராக ஆ.முகம்மது இம்தியாஸ், பொதுக்குழு உறுப்பினர்களாக கிருஷ்ணன் (எழும்பூர்), பிராட்வே டு.குமார் (துறைமுகம்), தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட அவை தலைவராக கோ. சாமிநாதன், மாவட்ட செயலாளராக விருகை ரவி, மாவட்ட இணை செயலாளராக சூ.மச்சரேகை, மாவட்ட துணை செயலாளர்களாக ஜெயப்பிரதா, சைதை சொ.கடும்பாடி, மாவட்ட பொருளாளராக மோகன், பொதுக்குழு உறுப்பினர்களாக மு.ஜெகன்னாதன் (விருகம்பாக்கம்), பூங்கா பார்த்தீபன் (விருகம்பாக்கம்), சென்னை புறநகர் மாவட்ட அவை தலைவராக காமராஜ், மாவட்ட செயலாளராக கந்தன், மாவட்ட இணை செயலாளராக லட்சுமி, மாவட்ட துணை செயலாளர்களாக மாலதி ஏசுபாதம், அம்மன் பி.வைரமுத்து, மாவட்ட பொருளாளராக ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜாராம் (சோழிங்கநல்லூர்), வரதராஜன் (ஆலந்தூர்), காஞ்சிபுரம் மாவட்ட அவை தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளராக சோமசுந்தரம், மாவட்ட இணை செயலாளராக மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட துணை செயலாளர்களாக ரேவதாட்சாயணி சுந்தர்ராஜன், போந்தூர் செந்தில்ராஜன், மாவட்ட பொருளாளராக வள்ளிநாயகம், பொதுக்குழு உறுப்பினர்களாக கங்காதரன் (உத்திரமேரூர்), ரங்கநாதன் (காஞ்சிபுரம்), ராஜமாணிக்கம் (ஸ்ரீபெரும்புதூர்), செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவராக தனபால், மாவட்ட செயலாளராக திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாவட்ட இணை செயலாளராக லீலாவதி அகோரம், மாவட்ட துணை செயலாளர்களாக மஞ்சுளா ரவிக்குமார், எஸ்வந்த்ராவ், மாவட்ட பொருளாளராக விஜயபாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்களாக ரவிச்சந்திரன் (திருப்போரூர்), கிருபாநிதி (மதுராந்தகம்),
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அவை தலைவராக பொன்னுதுரை, மாவட்ட செயலாளராக சிறுணியம் ஞ.பலராமன், மாவட்ட இணை செயலாளராக சுமித்ரா குமார், மாவட்ட துணை செயலாளர்களாக சியாமளா தனராஜ், ஸ்ரீதர், மாவட்ட பொருளாளராக வெங்கடரமணா, பொதுக்குழு உறுப்பினர்களாக அபிராமன் (கும்மிடிப்பூண்டி), அன்பழகன் (பொன்னேரி), கமலா (பொன்னேரி), திருவள்ளூர் மத்திய மாவட்ட அவை தலைவராக கண்ணன், மாவட்ட செயலாளராக பா.பென்ஜமின், மாவட்ட இணை செயலாளராக விஜயலட்சுமி ஜெயபால், மாவட்ட துணை செயலாளர்களாக புலவர் ரோஜா, மாவட்ட பொருளாளராக ஜாவித் அகமத், பொதுக்குழு உறுப்பினர்களாக அருள்யுகா (திருவள்ளூர்), வனிதா (மதுரவாயல்), ராஜகோபால் (பூந்தமல்லி), திருவள்ளூர் தெற்கு மாவட்ட அவை தலைவராக திண்டு உத்தமராஜ், மாவட்ட செயலாளராக அலெக்சாண்டர், மாவட்ட இணை செயலாளராக இந்திராணி, மாவட்ட துணை செயலாளர்களாக தேவகி, மாவட்ட பொருளாளராக ரவி, பொதுக்குழு உறுப்பினர்களாக மீனா பாண்டியன் (அம்பத்தூர்), மலைராஜன் (ஆவடி),
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவை தலைவராக ராஜேந்திரன், மாவட்ட செயலாளராக மாதவரம் ஏ.மூர்த்தி, மாவட்ட இணை செயலாளராக ராஜேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர்களாக இந்திரா, மாவட்ட பொருளாளராக வெங்கடாசலபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக பேரரசி (திருவொற்றியூர்), மனோகரன் (மாதவரம்), வடகரை ஆ.சுந்தர் (மாதவரம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, வேலூர் மாவட்ட செயலாளராக மு.அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளராக வேலழகன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் வீரமணி, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக சு.ரவி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி மு.மோகன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பாண்டியன், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக சொரத்தூர் இரா.ராஜேந்திரன், விழுப்புரம் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக அசோக்குமார், நாமக்கல் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அருண்குமார், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, அரியலூர் மாவட்ட செயலாளராக ராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக ஓ.எஸ்.மணியன்,
மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக பவுன்ராஜ், திருவாரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் சு.காமராஜ், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக ஏ.ஏ. ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக சு.மு.ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திருநெல்வேலி மாவட்ட செயலாளராக தச்சை சூ.கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக கிருஷ்ணமுரளி, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக செல்வமோகன் தாஸ் பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக சண்முகநாதன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக அசோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.