தேனி அருகே தப்புகுண்டுவில் உள்ள தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாய் பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் நாய் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த மோப்ப நாய்களான வெற்றி, வீரா, பைரவ், லக்கி ஆகிய நாய்கள் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நாய் கண்காட்சி நிகழ்ச்சியில் நாட்டு நாய் வகையான கோம்பை , ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை மற்றும் வெளிநாட்டு இன நாய் வகைகளான லேப்ரடார், ஜெர்மன் ஷெஃபர்ட், பாக்ஸர், ராட்வில்லர், அமேரிக்கன் பிட்புல், பக் என 15 க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன.