தெருநாய்களை எந்தெந்த இடங்களில் இருந்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு? முழு விவரம்

Share

தெரு நாய்கள் புகைப்படம்

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, அரசு நிறுவனங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இருந்து நாய்களை அகற்றி அவற்றிற்குக் கருத்தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.

நீதிமன்றம் தனது வாய்மொழி உத்தரவில், ‘இது கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும், இல்லையெனில் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க நேரிடும்’ என்று கூறியது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொது விளையாட்டு வளாகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை அடையாளம் காண வேண்டும் என்றும், தெரு நாய்கள் உள்ளே நுழையாதவாறு அவற்றைச் சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதிகாரிகள் தற்போதுள்ள தெரு நாய்களை இத்தகைய வளாகங்களில் இருந்து அகற்றி, அவற்றிற்குக் கருத்தடை செய்து, பின்னர் நாய்கள் காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com