தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு ‘தமிழிகம்’ என பெயர் சூட்டியது ஏன்?

Share

தமிழிகம்: தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழ் மொழியை பெயராகச் சூட்டியது ஏன்?

பட மூலாதாரம், Dr. Kodeeswaran P

படக்குறிப்பு, தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழிகம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை.

அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com