துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனை – எப்படி?

Share

துளசிமதி முருகேசன், அர்ஜுனா விருது

பட மூலாதாரம், @Thulasimathi11

படக்குறிப்பு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு துளசிமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

“தங்கல் (Dangal) படத்தில் வரும் அப்பா தனக்கு நன்கு தெரிந்த மல்யுத்தத்தை, மகள்களுக்கு சொல்லிக் கொடுத்து சாம்பியன் ஆக்குவார். எனது அப்பா, எனக்கும் அக்காவுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவே பேட்மிண்டன் கற்றுக்கொண்டவர். எனக்கு அறிவிக்கப்பட்ட அர்ஜுனா விருதை அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறுகிறார் துளசிமதி முருகேசன்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றவர்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘அர்ஜுனா விருதுக்கு’ துளசிமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என கடந்த ஜனவரி 2ஆம் தேதி மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

துளசிமதி முருகேசன், அர்ஜுனா விருது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘அப்பா தான் முதல் பயிற்சியாளர்’

துளசிமதி முருகேசன், தற்போது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு, கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். பிறக்கும் போதே தசைநார் சிதைவு காரணமாக இவரது இடதுகை பாதிக்கப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com