தற்போது மீண்டும் இந்த சர்ச்சைக்குத் தீனி போடும் விதமாக சானியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அந்த ஸ்டோரியில், “திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
உடல் பருமன் கடினமானது. ஃபிட்டாக இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். கடனாளியாக இருப்பது கடினமானது. நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
பிறருடன் தொடர்பு கொள்வது கடினமானது. தொடர்பு கொள்ளாமல் இருப்பது கடினமானது. உங்களுக்குக் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள்.
வாழ்க்கை எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமாக இருக்கும். ஆனால் நாம் கடினமானதைத் தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு, விவாகரத்திற்கான முன்கூட்டிய அறிவிப்பா என நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.