இப்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இலியானா, மகப்பேறுக்குப் பிறகான மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தச் சமயத்தில் அவரின் பார்ட்னர் ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“பெரும்பாலான அம்மாக்களின் குற்றஉணர்ச்சி முற்றிலும் உண்மையானது.. ஒருநாள் நான் என்னுடைய அறையில் இருந்தேன். திடீரென நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.
என்னவாயிற்று என பார்ட்னர் என்னிடம் கேட்க, `இது முட்டாள்தனமாக இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் மகன் வேறோர் அறையில் உறங்கிக் கொண்டு இருக்கிறான். அவனை மிஸ் செய்கிறேன்’ என்றேன்.
குழந்தை பெற்ற பிறகு இதுபோன்ற தீவிரமான எமோஷனை நீங்கள் அனுபவிப்பீர்கள். நான் இன்னும் அதை அனுபவித்து வருகிறேன்.

மைக் அற்புதமான பார்ட்னராக இருப்பதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு பிரேக் கொடுத்து, குழந்தையைக் கவனித்து கொள்கிறார்.
மகப்பேறுக்குப் பிறகான மனச்சோர்வு மிக உண்மை. எனக்கு வீட்டில் நல்ல ஆதரவும், நன்றாக கவனித்துக் கொள்ளும் மருத்துவர்கள் குழுவும் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
அம்மா என் முதல் காதல் நீ!