தமிழ்நாடு ஜல்லிக்கட்டில் அசத்தும் இந்த 6 காளைகள் பற்றி தெரியுமா?

Share

ஜல்லிக்கட்டு காளை

பட மூலாதாரம், shyam

படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளும் நெருங்கிவிட்டன.

ஜல்லிக்கட்டு என்பதென்ன?

வீரர்களுக்கும் மாடுகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் ‘நீயா… நானா என்ற போட்டி தானே. அந்த மாடுபிடி வீரர்கள் காளையை பற்றி மனம் திறந்து பேசினால் எப்படி இருக்கும்?

ஜல்லிக்கட்டு களத்தில் தாங்கள் வியந்து பார்த்த காளைகளை பற்றி சில வீரர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.

தோட்டா

தோட்டா காளை

பட மூலாதாரம், Selvakumar

படக்குறிப்பு, ‘தோட்டா’ வந்தால் களமே சற்று நேரம் பதறும் என்கிறார் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரர் முடக்கத்தான் மணி.

இது திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த சீனிவேல் என்பவரது காளை. இந்தக் காளை வந்தால் களமே சற்று நேரம் பதறும் என்கிறார் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரரும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் என்ற அமைப்பின் மாநில நிறுவனத் தலைவருமான முடக்கத்தான் மணி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com