“தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உதயநிதியிடம் உள்ளது'' – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Share

மதுரை வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது,  “துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். எந்த பொறுப்பை கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சராக ஒருவருட காலத்தில் சிறப்பாக பணி செய்துள்ளார். உலக அளவில் நடைபெறக்கூடிய கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர்.

உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வராக அவர் சிறப்பாக பணியாற்றுவார். தந்தை மு.க.ஸ்டாலினின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் அவரிடமும் உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தேர்தலின் போது இந்திய அளவில் எதிர்ப்புகள் வந்தது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உள்ளார்” என்றவர்,

‘செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவது’ குறித்த கேள்விக்கு,

“விமர்சனங்கள் இரண்டு புறமும் இருக்கலாம். 471 நாள்கள் சிறையில் ஜாமீன் கூட கொடுக்காமல் மத்திய அரசு பழிவாங்கும் செயலை செய்தது. உடல்நிலை சரியில்லை, இதய நோய் பிரச்னை உள்ள செந்தில் பாலாஜியை மத்திய அரசு வஞ்சித்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் சிறையில் வைத்தார்கள். இதுபோன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் வைத்தால் அடங்கி விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

இந்திய மக்கள் ஒரு மனதாக மோடியை தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்த எண்ணம் மோடிக்கு புரிந்த காரணத்தினால் முகத்தில் உற்சாகம் கொஞ்சம் கூட இல்லை. வெளிநாடு செல்லும் போது மட்டும் சிரித்துக் கொண்டிருக்கிறார் மோடி” என்றவர்,

‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவன் கருத்து’ குறித்த கேள்விக்கு,

“அவரவர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அவரவருக்கு விருப்பம் தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்று அனைத்து கட்சிகளும் சொல்லி இருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கூட்டணி முன்பை விட மிகவும் வலுவாக இருக்கிறது. திமுக பவள விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துள்ளார்கள. இந்தக் கூட்டணியில் உள்ளவர்கள் கொள்கைக்காக சேர்ந்தவர்கள்” என்றவர்,

‘தமிழக காங்கிரசின் செயல்பாடு’ குறித்த கேள்விக்கு,

” தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். வேலைகளை இன்னும் கொஞ்சம் தீவிர படுத்த வேண்டும்” என்று பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com