டென்னிஸ் வீராங்கனையை கரம்பிடித்த ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா! | Neeraj Chopra ties the knot with tennis player Himani Mor

Share

பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி மோர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மிகவும் எளிமையான முறையில், உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் நீரஜ் சோப்ரா திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான எந்த தகவலும் சமூக வலைதளங்களிலோ அல்லது ஊடகங்களிடமோ நீரஜ் சோப்ரா தரப்பு தெரிவிக்கவில்லை. தனது திருமண புகைப்படங்களை நீரஜ் நோப்ரா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகே இந்த திருமணம் குறித்து பலருக்கும் தெரியவந்தது. ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீரஜ் சோப்ராவுக்கு இரு தினங்களுக்கு முன்பு நடந்ததாகவும், அது எங்கே நடைபெற்றது என்று தான் சொல்லமுடியாது என்றும் அவரது மாமா பீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்.

நீரஜ் சோப்ராவை கரம்பிடித்திருக்கும் ஹிமானி மோர் ஒரு டென்னிஸ் வீராங்கனை. அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மேலும் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர டென்னிஸ் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com