டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா – அமெரிக்க உறவுகளை மேலும் கசப்பாக்குமா?

Share

இந்த ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்

பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவிக்கும்போது, இந்தியாவை நட்பு நாடு என்று அழைத்தார். ஆனால் மற்ற எந்த நாட்டுடனும் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் கடுமையான மற்றும் பொருளாதாரத்துக்கு உகந்ததற்ற தடைகள் உள்ளதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது பிரதமர் மோதி அவரைச் சந்தித்த நான்காவது உலக தலைவராக இருந்தார். இந்த சந்திப்பிலும், டிரம்ப் அவரை “சிறந்த நண்பர்” என்று அழைத்தார்.

ஆனால், டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் அவருக்கும் பிரதமர் மோதிக்கும் இடையே காணப்பட்ட அதே நட்புறவு கடந்த ஆறு மாதங்களில் காணப்படவில்லை.

தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், டிரம்புக்கும் மோதிக்கும் இடையேயான பழைய நட்பை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிகள் அரசை மடக்க முயற்சிக்கின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com