ஜப்பான்: 56 ஆண்டுகள் போராடி தம்பியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றிய அக்கா – எப்படி?

Share

ஹிடெகோ ஹகமாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் மிக நீண்ட கால மரண தண்டனைக் கைதியான தனது சகோதரனை விடுவிக்கப் போராடுவதில், 91 வயதான ஹிடெகோ ஹகமாடா தனது வாழ்நாளில் பாதி நாட்களைக் கழித்தார்.

கடந்த 2024 செப்டம்பரில் இவாவோ ஹகமாடா குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், ​​மரண தண்டனை விதிக்கப்பட்டு உலகின் மிக நீண்ட காலம் போராடிய ஒரு கைதியாக அவரால், அந்தத் தருணத்தில் மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை.

“அவர் விடுவிக்கப்பட்டதாக நான் அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார்” என்று அவரது 91 வயதான அவரது சகோதரி ஹிடெகோ ஹகமாடா, ஜப்பானின் ஹமாமட்சுவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது பிபிசியிடம் தெரிவித்தார்.

“இவாவோ புரிந்து கொண்டாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை” என்றார் அவரது சகோதரி ஹிடெகோ ஹகமாடா.

கடந்த 1968ஆம் ஆண்டில் நான்கு கொலைகளுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது முதல் ஹிடெகோ தனது சகோதரனின் மறு விசாரணைக்காகப் போராடி வந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com