சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் புளி உள்ளிட்ட புளிப்பான உணவுகளை தவிர்க்கவேண்டுமா? | Should people with sinus problems completely avoid sour foods, including tamarind?

Share

பெருமருந்துகள்  கொடுக்கும்போது, சித்த மருத்துவத்தில் சில பத்தியங்கள் அறிவுறுத்தப்படும். அதில் புளிப்புச்சுவையை குறைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம்.  

எல்லா நோய்களுக்கும் புளிப்பை முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, ஆனால், கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.
சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் என்பதால், புளிப்புச் சுவை அதிகமாகும் போது கபம் அதிகரிக்கலாம். சுவை தத்துவத்தின்படி, புளியைக் குறைப்பது சைனஸ் சிகிச்சைக்கு உதவும்.  

புளியை முற்றிலுமாக நீக்குவது பெரிய மருந்துகள் எடுக்கும்போதும், புற்றுநோய் போன்ற தீவிர சிகிச்சை எடுக்கும்போதும் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய்

சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய்

மற்ற நேரங்களில், புளியை முழுமையாக நீக்காமல் கொஞ்சம் குறைத்து எடுக்கலாம். சுவையே இல்லாமல் உண்பதும் தவறு.   புளிப்புத் தன்மை குறைவாக உள்ள, ஆனால் புளியின் பலன்களைக் கொடுக்கக்கூடிய கேரளத்துக் குடம் புளியை பயன்படுத்தலாம்.  

சைனஸ் ஏற்படும் சீசனிலும், சைனஸ் தீவிரமாக இருக்கும்போதும் நல்ல உணவியல் முறைகளைப் பின்பற்றவது,  ஆவி பிடிப்பது, ஃப்ரெஷ்ஷாக சமைத்த சூடான உணவுகளைச் சாப்பிடுவது,  கார்ப்புத்தன்மை உடைய, வெப்ப வீரியம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வது (உதாரணத்துக்கு, தூதுவளைத் துவையல், கொள்ளுத்துவையல், கொள்ளு ரசம் போன்றவை)   போன்றவற்றைப் பின்பற்றினாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com