சென்னை: உதட்டுச்சாயம் பூசியதால் பெண் தபேதார் பணியிட மாற்றமா? மேயர் பிரியா கூறுவது என்ன?

Share

சென்னை மேயர் அலுவலக தபேதார் பணியிட மாற்றம்

பட மூலாதாரம், PriyarajanDMK/X

படக்குறிப்பு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ரா.பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான பி.எஸ். மாதவி பளிர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிய காரணத்திற்காகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ள மாதவி தற்போது ஆவடியில் இருந்து மணலி மண்டலத்தில் அமைந்திருக்கும் அலுவலத்திற்கு கடந்த ஒரு மாதமாக பணிக்குச் சென்று வருகிறார். நாள் ஒன்றுக்கு மொத்தமாக 70 கி.மீ பயணம் செய்து வருவதாகவும், எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக இவ்வாறு தண்டிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் மாதவி.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பணிக்கு தொடர்ச்சியாகத் தாமதமாக வந்தது, எச்சரித்தும் சரிசெய்து கொள்ளாததே பணியிட மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறியவர், மாதவியின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.

உதட்டுச்சாயம் பூசியதற்காக ஒருவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவது உண்மையா? சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் என்ன?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com