கடுமையான சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தும் சூழ்ந்து இருந்தது. இந்த கடினமான சவால்களை எல்லாம் வெற்றிகரமாக கடந்து நடைமுறை செய்யப்பட்டதன் மூலம், நோயாளியால் இப்போது நன்றாக உணர முடிகிறது என்பது மட்டுமல்லாமல், நவீன நரம்பு அறுவை நடைமுறைகளின் மூலம், புற்றுநோய் வலியை எவ்வாறு வெகுவாகக் குறைக்க முடியும் என்பதில் அப்பல்லோ மருத்துவர்கள் குழு வரலாறு படைத்துள்ளது.
இந்த சிக்கலான “டிரெசோட்டோமி” நடைமுறையைச் செய்ய மிக நுண்ணிய துல்லியம் தேவை. இது நோயாளியின் உணர்வுகளைச் சுமந்து செல்லும் கழுத்துப் பகுதியில், முதுகுத் தண்டுவடத்தில் மிகச்சிறிய, துல்லியமான வெட்டுக்களைச் செய்வதை உள்ளடக்கியது, இந்த நடைமுறையை செய்யும் போது, ஒரு சிறு தவறு நடந்தால் கூட, நோயாளியின் நகரும் திறனுக்கு நிரந்தர சேதம் போன்ற, மீண்டும் சரிசெய்ய முடியாத கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் உயரளவு கவனம் தேவைப்படுகிற விதிவிலக்கான சவாலாக இருந்தது.
“டிரெசோட்டோமி” நடைமுறை, மேற்கை நரம்புப் பின்னல் வலி போன்ற சில வகையான வலிகளுக்கு உதவுவதாக அறியப்பட்டாலும், புற்றுநோய் வலியை திறம்பட நிர்வகிப்பதில் அதன் புதிய பயன்பாடு இன்னும் பரவலாக அறியப்படவில்லை. இந்த நடைமுறை, புற்றுநோயில் இருந்து உயிர்பிழைத்து இருப்பவர்களின் வாழ்க்கையை பெரிதும் மாற்றும் வாய்ப்பை கொண்டுள்ளது. நரம்பியல் அறுவை சிகிச்சை என்பது மிகவும் கடினமான மருத்துவச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பதில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எங்களின் வெற்றி உலகுக்கு காட்டுகிறது” என்றார்.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், “அப்போலோவில், புதிய யோசனைகளை அறிமுகப்படுத்துவதற்கும், நோயாளிகளின் பராமரிப்பை எல்லை இல்லாமல் மேம்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அப்போலோ புற்றுநோய் மையத்தில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள இந்த டிரெசோட்டோமி நடைமுறை, மருத்துவ அறிவியலின் எல்லைகளை ஆராய்வதிலும், உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதிலும் எங்களின் வலுவான ஈடுபாட்டுறுதிக் காட்டுகிறது. புற்றுநோயின் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கை, நிவாரணம், சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை வழங்குவதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தையும், எங்கள் மருத்துவக் குழுக்களின் சிறப்பறிவுத் திறத்தையும் பயன்படுத்துவதில் நாங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தச் சாதனை, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் சுகாதாரப் பராமரிப்பில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எமது தொடர்ந்து ஒரே சீரான, நிலைத்து நீடிக்கும் குறிப்பணியை நிரூபித்துக் காட்டுகிறது” என்றார்.
சென்னை அப்போலோ புற்றுநோய் மையத்தின் மருத்துவ புற்றுநோயியல் இயக்குநர் டாக்டர் டி.ராஜா கூறுகையில், “புற்றுநோயால் ஏற்படும் வலியை எவ்வாறு திறம்பட குறைப்பது என்பதில் இந்த முன்னோடியான “டிரெசோட்டோமி” நடைமுறை ஓர் திருப்புமுனையான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.” இந்தச் சாதனையானது அப்போலோ புற்றுநோய் மையத்தின் கூட்டுமுயற்சி, புதிய யோசனைகளை முன்னெடுப்பதில் ஈடுபாட்டுறுதி ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த சான்றாக உள்ளது. எங்கள் நோயாளிகளுக்கு, அதிலும் குறிப்பாக மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கையாள்பவர்களுக்கு முழுமையான பராமரிப்பை வழங்குவதற்கு சாத்தியமுள்ள எல்லா வழிகளிலும் முயற்சி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இந்த சாதனை உறுதிப்படுத்துகிறது. இந்த நடைமுறையானது புற்றுநோய் வலியைக் குறைப்பதில் நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிப்பதுடன், அவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தி, சாத்தியமுள்ள பலன்களைப் பெற உதவுகிறது.”