சென்சோ-20: சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்களுக்குச் சிறிய குப்பை ஏற்படுத்திய பிரச்னை என்ன?

Share

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்க புதிய விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது.

சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில் சென்ற சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.

சீன தாய்கோனாட்டுகள் (சீனா தனது விண்வெளி வீரர்களை ‘தாய்கோனாட்’ என அழைக்கிறது) நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சாதனை படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், தனது மூன்று விண்வெளிப் பயணங்களில் மொத்தமாக 400 நாட்கள் விண்வெளியில் கழிக்கும் சாதனையை குழுத் தலைவர் சென் தோங் படைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com