`ஆளுநர் டெல்லியில் இருக்கட்டும்…செலவு மிச்சம்!’
அவர், `தமிழகம் என்றுதான் பேசுவேன், அண்ணா, பெரியாரைப் பேச மாட்டோம்’ என்றார். அதன் பிறகு தமிழக அரசு கொடுத்த பதிலடியால், தேநீர் விருந்து அழைப்பிதழில் ’தமிழ்நாடு’ என அச்சிட்டார். அவர் சட்டவிரோதமாகச் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சட்டப்படி, ’நீங்கள் ஒன்றுமில்லை’ என உணர்த்துகிறோம். தமிழக மக்களும், `ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அதன் பிறகு தமிழக அரசு என்ன செய்யும்?’ என நினைத்தனர். இந்த நிலையில், அரசாணையை வெளியிட்டிருக்கிறோம். ஆகவே, இதிலிருந்து அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள். இவரின் இந்தச் செய்கை அவர் மதிப்பை மேலும் குறைத்துக்கொண்டே செல்லும்.
இனிமேலும் இவர் மோதல் போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருந்தால், அவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்னும் முடிவுக்கு திமுக வரும். ஆட்சி அமைப்புக்கும், சட்டசபையைத் தொடங்கிவைக்கவும் அவர் தேவைப்படுகிறார். மற்றப்படி ஆளுநர்கள் மாநிலத்தில் எதற்காக இருக்க வேண்டும்… இதற்காகத்தான் அண்ணா சொன்னார், “பதவிப் பிரமாணம் செய்த பிறகு அவர்களை டெல்லியில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று. மாநில அரசுகளுக்குச் செலவுகள் மிச்சமாகுமல்லவா! ’புடிச்சு வெச்ச பிள்ளையார்போல்’ மாநிலத்தில் அவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, மாநிலத்தில் அசாதாரணமான சூழல் இருந்தால் டெல்லியிலிருந்து மாநிலத்துக்கு அனுப்பிவையுங்கள். இப்படியான முடிவுக்கு திமுக தலைமை நிச்சயம் தள்ளப்படும்“ என்றார்.