செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது’ – செல்லூர் ராஜூ | Sellur raju meet to press at madurai regarding sengottaiyan

Share

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார்கள். மதுரையில் திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளரிடம் பேசும்போது, “அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இல்லை என செங்கோட்டையன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் கேட்டுள்ளார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதிமுக கட்சியையோ, பொதுச் செயலாளரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்பாளரிடம்தான் சொல்லியுள்ளார். இதனால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று செங்கோட்டையனே சொல்லிவிட்டார், இதற்குப் பின் இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com