இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு முழுநேர பேட்ஸ்மனாக இடம் பெற்றிருக்கிறார். அதேவேளையில் அனுபவ வீரரான விராட் கோலிக்கும் இடம் கிடைத்திருக்கிறது.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி தொடர்ந்து விளையாட இருக்கின்றனர்.
ஆனால் எதிர்வரும் 2027 உலக கோப்பை வரை அவர்கள் நீடிப்பது கடினம் என்றே பலரும் கூறி வருகின்றனர்.
ஏனெனில் அடுத்த உலக கோப்பை தொடரின் போது ரோகித் சர்மாவிற்கு 40 வயது, விராட் கோலிக்கு 38 வயதாகிவிடும்.
அதனால் அவர்களை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்யாது என்று பலரும் கூறி வருகின்றனர்.