சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கினால் மனித உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

Share

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, நாசா, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்

பட மூலாதாரம், Alamy

  • எழுதியவர், ரிச்சர்ட் கிரே
  • பதவி, பிபிசி செய்திகள்

ஒரே பயணத்தில் விண்வெளியில் அதிக நாட்கள் இருந்ததற்கான சாதனை தற்போது 437 நாட்களாக உள்ளது. ஆனால் விண்வெளியில், நீண்ட காலம் இருந்தால் ஒரு விண்வெளி வீரரின் தசை, மூளை மற்றும் குடலில் உள்ள பாக்டீரியா என அவரது உடலில் ஆச்சரியமான வழியில் ஏராளமான மாற்றங்கள் நிகழலாம்.

எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டிய விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், ஒன்பது மாதங்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை.

அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அன்று விண்வெளிக்கு சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர்கள் இல்லாமல், இந்த விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் அவர்கள் விண்வெளியில் தங்கியிருப்பது எதிர்பார்த்ததை விட நீண்டது .

அவர்கள் இருவரும், விண்வெளிப் பயணத்தின் கடுமைகளுக்குப் புதியவர்கள் அல்ல. அவர்கள் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள். ஆனால் விண்வெளியின் விசித்திரமான, குறைந்த ஈர்ப்பு விசை சூழலில், நீண்ட நேரம் இருந்ததால் அவர்களின் உடலில் தற்போது பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com