நாங்க லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால் சின்னவயசுல தீபாவளிக்கு மட்டும்தான் புது டிரஸ் வாங்கி கொடுப்பாங்க. அதனால எங்களுக்கு தீபாவளினாலே ரொம்ப ஸ்பெஷல் புது டிரஸ்தான்.
அடுத்து எங்க வீட்ல இனிப்பு பலகாரமும், சாப்பாடும் ஸ்பெஷல். இயல்பாவே எங்க வீட்ல சாப்பாடு அல்டிமேட்டா இருக்கும். தீபாவளிக்கு சொல்லவே தேவையில்ல.
எனக்கு கர்நாடக மாநிலம் சிக்மங்ளூர்தான் சொந்த ஊர். எங்க பாட்டி இருந்த வரைக்கும் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊருக்கு போயிடுவோம்.

நானும் அப்பா அம்மா என்னோட ரெண்டு சிஸ்டர்ஸ்னு 5 பேரும் ஒரே பைக்ல ஊருக்குப் போவோம். நம்ம சிட்டில இருக்குறமாதிரி இருக்காது. அங்க இருக்குற லைப் வேறமாதிரி இருக்கும்.
சித்தப்பா, பாட்டினு ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவோம்.
தீபாவளி அன்னைக்கு வீட்டுல சாமி கும்பிடுறது, வீட்டுல வளர்க்குற மாட்டுக்கு பூஜை செய்றது, எல்லோரும் சேர்ந்து சாப்பிடுறதுனு ஒட்டுமொத்தமா கோல்டன் பீரியட் அது. அதெல்லாம் இப்போ நினைச்சாலும் சந்தோஷமா இருக்கும்.