சீனா வெற்றி தின அணிவகுப்பில் உலகுக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களின் சிறப்பம்சங்கள்

Share

ரோபோ நாய்கள், சீனா, செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், சீனாவின் வெற்றி தின அணிவகுப்பு

பட மூலாதாரம், AFP via Getty Images

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உரைக்குப் பிறகு, சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் (Victory Day Parade) அந்நாட்டின் ராணுவ வலிமை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அடங்கும்.

அணிவகுப்புக்கு முன்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் ஒன்றாகக் காணப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை வாழ்த்தி, அமெரிக்காவுக்கு எதிராக இந்தக் கூட்டணி ‘சதி’ தீட்டுவதாக கிண்டலாக குற்றம் சாட்டினார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை ஜின்பிங் நடத்தினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com