தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க அரசிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, “தமிழகத்தில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில், தி.மு.க-வின் தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைத்தலைவராக இருக்கும் B.T.அரசகுமார், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், தனது தலைமையில் ஒரு புதிய சங்கம் தொடங்குகிறார். அதன் தொடக்கவிழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.