சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது உணவுக் கட்டுபாடுதான். இதுநாள் வரை கணக்கிடாமல் பசித்த போது சாப்பிட்டு வந்த நபர்கள் தாங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்ததும் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளையே சற்று மாற்றி, அளவாக சரியான நேரத்தில் உண்ணத் தொடங்கிவிடுவார்கள்.
அப்படி இருக்கையில் நீரிழிவு நோய்க்கு கட்டாயம் சில பிடித்தமான உணவுகளை தவிர்த்து தான் ஆகவேண்டும். அதற்காக உப்பு சப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட வேண்டுமென அவசியம் இல்லை. அன்றாடம் சாப்பிடுவதே சலிக்காமல் இருக்க அவ்வபோது இதுபோன்ற சுவையான சிம்பிளான உணவுகளை செய்து சாப்பிடும்போது சர்க்கரை நோயாளியின் சுவை அரும்புகளை மகிழ்விக்கும்.
நாவல்பழம் சர்க்கரை வியாதியை குணமாக்கும் ஒரு சிறந்த பழமாகும். நாவல்பழத்தில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமில் பி6 போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன
தேவையான பொருட்கள் :
லேசாக நறுக்கி வேகவைத்த நாவல்பழம் – 1 கப்
நறுக்கிய பச்சைமிளகாய் – சிறிதளவு
நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
தயிர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் தயிரை திட்டு திட்டாக இல்லாமல் நன்றாக ஸ்மூத்தான க்ரீம் போல அடித்து கொள்ளுங்கள். அதன்பின் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் ஒன்றொன்றாக செர்த்து ஃபோர்க் கொண்டு கிளரினால் சுவையான் நாவல்பழ சாலட் தயார்.
கூடுதல் குறிப்பு : இந்த சாலட்டை ஜில்லென சாப்பிடுவத்ற்கு அருமையாக இருக்கும். ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து குளிர்ச்சியாக பறிமாறுவதற்கு பதில், குளிர்ச்சியான தயிர் கொண்டே செய்தால் உடனடியாக சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். ஏனென்றால் இந்த சாலட்டை செய்தவுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் அதன் சுவையும் மாறாமல் இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.