சன் குழுமம்: கலாநிதி மாறன் – தயாநிதி மாறன் இருவருக்கும் என்ன பிரச்னை?

Share

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

‘முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை’ எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உள்பட 8 பேருக்குத் தனது வழக்கறிஞர் மூலமாக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று தயாநிதி மாறன் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com