கௌதம் கம்பீர்: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிச்ச் நிலைகள் குறித்து கருத்து | Gautam Gambhir on Pitch Conditions and Indian Cricket Team Performance

Share

“நாங்கள் தேடிக்கொண்டிருந்த ஆடுகளம் இதுதான். இதில் பேய்களோ அல்லது விளையாட முடியாத வகையிலோ இல்லை. அக்சர், டெம்பா, வாஷிங்டன் ஆகியோர் ரன்கள் எடுத்தனர். இது பந்து திரும்பும் வகையிலான விக்கெட் என்று நீங்கள் சொன்னால், பெரும்பாலான விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர்.

நாங்கள் வென்றிருந்தால், பிட்ச் பற்றி இவ்வளவு கேட்கவோ விவாதிக்கவோ மாட்டீர்கள். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட எங்களிடம் வீரர்கள் உள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

கம்பீரின் கருத்துகளை இந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே சமூக வலைத்தளங்கள் காட்டுகின்றன. ரசிகர்கள் அவரது பதவிக்காலத்தில் டெஸ்டில் ஏற்பட்டுள்ள மோசமான சாதனையைக் குத்திக் காட்டுகின்றனர்.

கம்பீர் பயிற்சியாளரான பிறகு இந்திய அணி விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 7-ல் வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இரண்டு போட்டிகள் சமன் செய்யப்பட்டுள்ளன. அடுத்த வரும் இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் அதிக அழுத்தத்துடன் இரண்டாவது போட்டியை எதிர்கொள்வார் கௌதம் கம்பீர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com