கோவை முதியவருக்கு போலி இ-சலான் அனுப்பி மோசடி செய்த குஜராத் கும்பல் சிக்கியது எப்படி?

Share

போலி இ-சலான் அனுப்பி பணமோசடி: குஜராத்தை சேர்ந்தவர்கள் கோவை போலீஸிடம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், TN POLICE

சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வந்த தகவலை உண்மையென நம்பி, apk பைலை பதிவிறக்கம் செய்த கோவை முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் குஜராத் சென்று, இதில் தொடர்புடையதாக 10 பேரை கைது செய்து, 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ரூ.3.5 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இதுபோன்று போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் லிங்க், apk பைல் வந்தால் அதைத் திறக்க வேண்டாமென்று காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

உண்மையான தகவலுக்கும், போலியான இ-சலானுக்கும் உள்ள வித்தியாசங்களையும் விளக்கினர்

மொபைலில் வந்த தகவல்

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் என்பவருக்கு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியன்று, அவருடைய வாட்ஸ்ஆப்க்கு ஒரு தகவல் வந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com