சில நிர்வாகிகள் 2-3 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு தொகுதிக்கான நேர்காணலில் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று கூறியதால், கடைசி நேரத்தில் பல நிர்வாகிகள் நேர்காணல்களில் மாறி மாறி அமர்ந்துள்ளனர்.

இன்னும் ஒரு வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், திமுகவில் இப்போதுவரை வேட்பாளர்கள் யார் என்று உடன்பிறப்புகளே அறிய முடியாதளவுக்கு சஸ்பென்ஸ் நிலவுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், கொமதேக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக, மநீம, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்டோர் கோவையில் சீட் எதிர்பார்க்கிறார்கள்.
மொத்தமுள்ள 10 தொகுதிகளில், சிங்காநல்லூர் (சிபிஎம்), கிணத்துக்கடவு (காங்கிரஸ்), பொள்ளாச்சி அல்லது சூலூர் (கொமதேக) என்று முடிவாகியுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளில் திமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.