கோவிட்-19 பரவிய 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது?

Share

கொரோனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்

2020 ஆம் ஆண்டுக்கு முன்பு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். மாஸ்க், சானிடைசர், குவாரன்டைன், பொது முடக்கம் (லாக்டவுன்) ஆகிய வார்த்தைகள் உங்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாதவையாக இருந்திருக்கும்.

ஒருவருடன் கைகுலுக்க அல்லது அருகில் நின்று பேச தயக்கம் காட்டியிருந்திருக்க மாட்டீர்கள். வகுப்புகள் அல்லது வேலைகளை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே செய்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமலான பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது.

உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 தோற்றால் இந்தியாவில் மட்டும் 4.7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது. இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் (இந்திய அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஏற்க மறுக்கிறது).

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com