கோட்டா: நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர் போன இந்த நகரில் அந்த தொழில் வீழ்ச்சி அடைகிறதா?

Share

கோட்டா, நீட், ஐஐடி பயிற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • எழுதியவர், அபினவ் கோயல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

சோனு கௌதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எட்டு மாடிகள் கொண்ட விடுதியின் முதல் தளத்தில் உள்ள அறையில் வசித்து வருகிறார். இவர், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்.

புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் எங்கும் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு கட்டிலில் அவர் அமர்ந்திருக்கிறார். மாதம் ரூ.2,500 வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த அறையில் சோனு தனியாக வசித்து வருகிறார். அவரது பெரும்பாலான நண்பர்கள் ராஜஸ்தானின் கோட்டா நகரை விட்டு வெளியேறிவிட்டனர்.

ஒரு காலத்தில், அவர் தங்கியிருந்த விடுதி மாணவர்களால் பரபரப்பாக இருந்தது. இப்போது அந்த விடுதி கிட்டத்தட்ட காலியாக உள்ளது.

“இப்போது இங்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பயிற்சி வகுப்புகளில் கூட முன்பைப் போல் மாணவர்களை பார்ப்பதில்லை. இரண்டு வருடமாக நான் என் வீட்டுக்கு செல்லவில்லை. வீட்டுக்குப் போனால் ஏன் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என்று ஊர் மக்கள் கேட்பார்கள்” என்கிறார் சோனு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com