கொடைக்கானலில் போதைக்காளான், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் புழக்கம் அதிகமாக இருப்பதாகப் புகார் உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் கஞ்சா செடியை வளர்த்து வேரோடு பறித்து விற்பனைக்குக் கொண்டு சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கொடைக்கானல் காவல்துறையினர், “கொடைக்கானல் நகர் பகுதியில் வழக்கம் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது பாம்பார்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் போதையில் வந்தார். அவரை நிறுத்திச் சோதனையிட்டபோது அவரிடம் 4 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்தது.