சில்லி பீன்ஸ் சூப் : பீன்ஸ் விதைகளை இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அதனை குக்கரில் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து, சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய வெங்காயம், 3 அல்லது 4 பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் அதனுடன் பீன்ஸ் விதை, ஊட்டி மிளகாய் போன்றவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சூடான பீன்ஸ் சூப் தயார்.
குளிருக்கு இதமாக புரோட்டின் நிறைந்த சூடான சூப்கள் குடிக்க ஆசையா.! ரெசிபிக்கள் இதோ
Share