தேவையானவை:
மைதா மாவு – 1 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
வெண்ணெய் – ¼ கப்,
சர்க்கரை – ¾ கப்,
முட்டை – 1,
வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன்,
பால் – 2 டேபிள் ஸ்பூன்,
உலர்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய செர்ரி பழம் – 1 ஸ்பூன்.
செய்முறை:
மைதாமாவு, உப்பு சேர்த்து சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் க்ரீம் பதம் வரும் வரை எலக்ட்ரிக் பீட்டரால் அடிக்கவும். இத்துடன் மைதா, பாலையும் சிறிது, சிறிதாக சேர்த்து கலக்கவும். இத்துடன் உலர்ந்த திராட்சை, செர்ரி கலந்து கலவை தயார் செய்யவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய பேப்பர் கப்களில் பாதியளவு மட்டும் ஊற்றி அவனில் 170 சென்டிகிரேடில் 20 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். இதனை கப் கேக் மோல்டிலும் ஊற்றி வேகவைக்கலாம்.