தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மூன்று மகன்களும் சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகனான கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு செல்லையா, அவருக்குச் சொந்தமான நெல் வயலை விற்று தனது மூன்று மகன்கள் மற்றும் மகளுக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்தார். அவருக்கு என ரூ. 1.25 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.
இந்த நிலையில், அவரது இரண்டாவது மகனான கணேசன் தனக்கு கடன் பிரச்னை இருப்பதால் அந்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.