நோயை எதிர்த்து போராடும்
வழக்கமான அரிசியில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopolysaccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மேமாய் ரகத்தில் 6 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு கின்மேமாய் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
இந்த வகை அரிசியை உற்பத்தி செய்ய பிகாமாரு மற்றும் கோஷிஹிகாரி ரக நெல் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளையும் நெல்லை விவசாயிகளிடமிருந்து எட்டு மடங்கு அதிக விலையில் வாங்குகின்றனர். அதை பிரத்யேகமான முறையில் சத்து குறையாமல் மில்லில் அரைத்து பாலிஷ் செய்கின்றனர். . இந்தப் பகுதி மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது. எனவே, இங்குள்ள வெப்பநிலை நெல் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது. ஜப்பானில் 300 வகையான அரிசி ரகங்கள் இருக்கிறது.
ஜப்பானின் டோயோ ரைஸ் கார்ப்பரேஷின் தலைவராக இருந்த 91 வயதான தலைவரான கெய்ஜி சாய்கா கின்மேமாய் பிரீமிய அரிசி உற்பத்திக்கு காரணமாக இருந்தவர். 2016ம் இவர் தான் இந்த அரிசியை அறிமுகம் செய்தார்.