கிங்டம் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா இலங்கை தீவில் மறைந்த உண்மையை கண்டுபிடித்தாரா?

Share

KINGDOM MOVIE REVIEW

பட மூலாதாரம், X/@TheDeverakonda

கிங்கடம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.

விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார்.

அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்ல தயாராகிறார். அந்த தீவில் உள்ளவர்களை வைத்து நடைபெறும் கடத்தல் தொழிலை எப்படி ஒழிக்கிறார், தன் அண்ணனை கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் சாராம்சம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com