காஸா போர் நிறுத்தம்: இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா? | Not only Trump these countries also played an important role in ending the war in Gaza

Share

2. பிரான்ஸ்:

ஐரோப்பாவில் பிரான்ஸின் பேச்சுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் வைக்கும் கருத்து அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பிரான்ஸின் தலையீடு காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. 

ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலை பிரான்ஸ் கண்டித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் அந்தத்  தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். முதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்திய அட்டூழியங்கள் ஏற்புடையதல்ல என வெளிப்படையாக பேசினார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான். காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுமதிக்காமல், பட்டினியை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் கையில் எடுத்ததை அவர் கண்டித்தார். சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமை மீறலை நிறுத்தவில்லை என்றால், இஸ்ரேல் மீது தடைகள் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். எவ்வளவு சொல்லியும் இஸ்ரேல் கேட்காததால், 2 முக்கிய விஷயங்களைச் செய்தார் மேக்ரான்.

1) நியூயார்க் தீர்மானம் (The Newyork Declaration) – சவுதி அரேபியாவுடன் இணைந்து ஐநா சபையில், ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது பிரான்ஸ். அதில், காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீனத்தில் இரட்டை அரசாங்க முறை அமல்படுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 142 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கொடுக்கப்பட்ட முதல் அழுத்தம்.

2) பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரம்: ஹமாஸ் நடத்தியது கொடூரத் தாக்குதல்தான். அது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால், அதற்காக காஸாவில் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பதை எந்த காரணத்தை சொல்லியும் நியாயப்படுத்த முடியாது என ஐநா வருடாந்திர சிறப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் பேசினார் மேக்ரான். போரை நிறுத்துவதற்கும், நீடித்த அமைதி திரும்புவதற்கும் ஏதுவாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக மேக்ரான் அறிவித்தார். இது இரண்டாவது அழுத்தம். பிரான்ஸுக்கு முன்பே பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்திருந்தாலும், அதில் பிரான்ஸ் உருவாக்கிய கருத்தின் தாக்கம் இருக்கிறது. மற்றொரு புறம் இதைத்தாண்டி பெரிய அழுத்தத்தையோ, பங்களிப்பையோ பிரிட்டன் கொடுக்கவில்லை. 

அந்த வகையில், திக்கற்று இருந்த இந்த போரை முடிவை நோக்கி திசை திருப்பியதில், பிரான்ஸின் பங்கு மிக முக்கியமானது. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com