கார்க்: அமெரிக்கா தாக்கியதாக கூறும் இந்த மிகச்சிறிய தீவை இரானின் உயிர் நாடி என்பது ஏன்?

Share

கார்க், இரானின் உயிர் நாடி, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சற்று நேரத்திற்கு முன்பு, எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. கார்க் தீவு இரானின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.” என்று கூறியிருக்கிறார்.

தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இந்த செய்தியைப் பதிவிட்ட டிரம்ப், தற்போதைக்கு “மனிதநேயம் மற்றும் தார்மீகக் காரணங்களுக்காக, இந்தத் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்” என்று எழுதியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையேயான போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்பு டேங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

இஸ்ரேலியப் படைகள் இதுவரை டெஹ்ரானில் உள்ள ரய் (Rayy), ஷஹ்ரான் மற்றும் அக்டிசியே ஆகிய எண்ணெய் கிடங்குகளையும், கரஜ் நகரத்தின் ஃபார்டிஸ் பகுதியையும் தாக்கியுள்ளன. இரானிய அரசு “ராணுவத் தளங்களை உருவாக்கப் பயன்படுத்திய” எரிபொருள் டேங்குகளே இந்தத் தாக்குதல்களின் இலக்கு என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இரானும் பதிலடி கொடுப்பதில் பின்வாங்கவில்லை. பாரசீக வளைகுடாவின் பல நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது அது தாக்குதல் நடத்தியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com