சவுதி அரேபியாவில் உணவங்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவது கண்டறியப்பட்டு மூடப்படுவது புதிதல்ல . ஏற்கெனவே ஜெட்டாவில் உள்ள ஷவர்மா உணவகம் ஒன்றில் ஷவர்மா மீது எலி அமர்ந்து அங்கிருக்கும் இறைச்சியை உண்ணும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
பலரும் அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்ததையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் சுமார் 2,833 உணவகங்களை ஆய்வுசெய்தனர். அதில் 43 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு இதுவரை 26 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.