“கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது” -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள் நெகிழ்ச்சி | “College dream fulfilled” – women in `One Day Student’ program

Share

இந்த ஒரு நாள் மாணவி திட்டத்தை பற்றி இல்லத்தரசிகளிடம் கேட்டபோது, “எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னோட பொண்ணுங்க வந்து இங்க படிக்கிறாங்க. நம்மளும் இப்படி கல்லூரி வகுப்பறையில் உக்காந்து படிக்கவேண்டும் என்ற ஆசை பல வருடமாக இருந்தது. அதெல்லாம் நடக்குமா! என்ற எண்ணம் இருந்தது. இப்போது, அது நடந்துருக்கிறது. இதற்கு காரணமான சக்திகைலாஷ் நிறுவனத்துக்கு நன்றி. மாணவிகளோடு மாணவிகளாக உக்காரும் போது, நம்மளும் படிக்க போகிறோம் என்றும் கல்லூரி அனுபவம் கிடைத்த ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது” என்று கூறினார்கள்.

“எனக்கு படிப்பின் மீது மிகவும் அதீத ஆசை. நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். மேலே படிக்க என்னால் முடியவில்லை. ஆனால், என்னுடைய ஆசைகளை என் பிள்ளைகள் நிறைவேற்றி விட்டார்கள். இருந்தாலும் எனக்கும் கல்லூரி அனுபவம் வேண்டும் கல்லூரி படிக்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு இந்த திட்டத்தை பற்றி என் பிள்ளைங்க தான் சொன்னாங்க அவர்கள் தான் என்னை இங்கே அனுப்பி வைத்தார்கள். பெத்தவங்க தான் பிள்ளைங்கள கல்லூரி அனுப்பி வைப்பாங்க, இங்க என் பிள்ளைங்க என்னை அனுப்பி வெச்சிருக்காங்க அவங்களுக்கு நன்றி” என்று ஒரு இல்லத்தரசி தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் நோக்கத்தை பற்றி கேட்டபோது உதவி ஆசிரியர் பவித்ரா கூறுகையில், “இனிமேல் எந்த கல்லூரி இந்த திட்டத்தை செய்தாலும் இதற்கு முதல் விதையை எங்க காலேஜ் தான் விதச்சிருக்கு. அதில், பெருமை அடைகிறோம். இந்த திட்டத்தில் பல பேர் நிறைய விசயங்களை கற்று கொண்டார்கள். அவர்களது கேள்விகளை கேட்டு திருப்தி அடைந்தார்கள். வீட்டில் செய்யும் சிறு தொழில் பற்றிய கேள்விகளை கேட்டு பயனடைந்தார்கள். மாணவிகளோடு மாணவிகளாக இவர்கள் உக்காந்து செய்யும் சேட்டையை தாங்க முடியவில்லை” என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com