பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்திருக்கிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர்; ஒட்டுமொத்த வாக்குவங்கியில் 5 சதவீதம் தமிழர்கள் உள்ளனர். தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளில் உள்ள தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுப்பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஏற்கனவே சில முறை அதிமுக வென்ற வரலாறு உள்ளது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம்..!!
Share