கரூர் கூட்ட நெரிசல்: மாமல்லபுரம் விடுதியில் விஜயை சந்தித்த போது என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்

Share

கரூர் கூட்ட நெரிசல், தவெக, விஜய், வழக்கு விசாரணை, ஸ்டாலின்

பட மூலாதாரம், TVK

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

“குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்” என, விஜய் உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை.

நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30 நாட்களுக்குப் பிறகு விஜய் சந்தித்ததை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படிப் பார்க்கின்றன? அவர்களிடம் விஜய் பேசியது என்ன?

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com