இந்நிலையில் கபடியை மையமாக வைத்து சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி கபடியில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசனின் வாழ்க்கையை “பைசன்’ திரைப்படமாக எடுத்த இயக்குநர் மாரிசெல்வராஜ், கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டி ரூ.5 லட்சம் வழங்கினார். கண்ணகி நகர் மேம்பாட்டிற்கும் ரூ.5 லட்சம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டிய நடிகர் சரத்குமார், “விளையாட்டு என்றாலே எனக்கு ஒரு ஆர்வம் உண்டு. அதனாலேயே கார்த்திகாவை நேரில் வந்து பார்க்க ஆசைப்பட்டேன்.
திறமையான விளையாட்டு வீரர்களைப் பார்த்தால் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆசைப்படுவேன். கபடியில் முன்னேற கார்த்திகாவிற்கு என்ன வசதிகள், உபகரணங்கள் எல்லாம் வேண்டுமோ அதற்கான உதவியைச் செய்யத் தயாராகவிருக்கிறேன். கபடி நம் நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது” என்று பேசியிருக்கிறார்.