கடந்த வாரத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லை; இந்தியா பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்குவது குறித்து BCCI | india pakistan no handshake issue BCCI spoke about ongoing women’s odi world cup

Share

சமீபத்தில் நடந்து முடிந்த 17-வது ஆசிய கோப்பைத் தொடரில் என்ன நினைத்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இருக்கும்படி போட்டி அட்டவணை தயார் செய்தார்களோ, அதற்கேற்றாற்போலவே தொடச்சியாக லீக், சூப்பர் 4, இறுதிப் போட்டி என 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தியா, பாகிஸ்தான் மோதின.

மூன்று போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.

ஆனால், இந்த மூன்று போட்டியிலும் இந்தியா வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காதது, களத்தில் இரு அணி வீரர்களும் சைகைகள் காட்டியது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் அந்நாட்டு அமைச்சர் என்பதால் என்ற காரணத்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியின் கரங்களால் கோப்பை வாங்க மாட்டோம் என இந்தியா வீரர்கள் புறக்கணித்தது ஆகிய சர்ச்சைகள் ஆசிய கோப்பை தொடருக்கு மிகப்பெரிய விளம்பரமாகவும் அமைந்தது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை
ICC

இத்தகைய சூழலில், இந்தியா இலங்கை இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 5) கொழும்பு மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகிறது.

இந்நிலையில் இதிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளிடம் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்கமாட்டார்களா என்ற கேள்வியெழுந்திருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com