விடுமுறை நாள்களில் கூட தவறாமல் பயிற்சியில் ஈடுபவார்!
பள்ளியின் சார்பில் ஜனவரி 20 அன்று தன்னை வரவேற்க நடத்தப்பட்ட வரவேற்பு விழா குறித்துப் பேசுகையில், “எனது பெற்றோர்கள் முன்னிலையில், சுமார் 3,500 பள்ளி மாணவியர் கூடி கைதட்டி என்னை வரவேற்றனர். தலைமையாசிரியை சந்தன மாலை அணிவித்தார், உடற்கல்வி ஆசிரியை கிரீடம் அணிவித்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூங்கொத்து கொடுத்தார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொன்னாடை போர்த்தினார். பள்ளியின் சார்பிலும் கோப்பைகள் வழங்கினர்.” என்று நெகிழ்ந்தார்.
தன்யா குறித்துப் பேசிய தலைமையாசிரியை சாந்தினி கௌசல், உடற்கல்வி ஆசிரியை பத்மா ஆகியோர், “தன்யா மிக இளம் வயதிலேயே சிறந்த தடகள வீராங்கனையாக உள்ளார். இளம் வயதிலேயே பலவற்றைத் தியாகம் செய்து, தினமும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரையாண்டு விடுமுறை நாள்களில் கூட தவறாமல் தினமும் பயிற்சி செய்தது பாராட்டுக்குரியது.” என்று பெருமை கொண்டனர்.
கடின பயிற்சியே வெற்றிக்கான வழி என்று, தினமும் அதிகாலை 5.30 முதல் காலை 8.15 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 வரை தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் தன்யாவுக்கு மேலும் பல வெற்றிகள் குவிய வாழ்த்துகள்!