ஒரு ஆணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அளவுகோலாக திகழ்வது எது?

Share

ஆணுறுப்பு ஏன் ஆண்களின் ஆரோக்கியத்தின் அளவீடாக இருக்கிறது?

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

விறைப்புத்தன்மை குறைபாடு என்பது மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் மறதி நோய் ஆகியவற்றின் ஆரம்பகால எச்சரிக்கையாக இருக்கலாம். நோயாளிகளும் மருத்துவர்களும் இதை கவனத்தில் கொள்ளத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விறைப்புத்தன்மை குறைபாட்டை ஒரு அமைதியான தொற்றுநோய் என்று நீங்கள் விவரிக்கலாம். பல ஆய்வுகளின்படி, இது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிக்கும் அதிகமானோரை பாதிக்கிறது. இருப்பினும், சிலர் மட்டுமே தங்களுக்குப் பிடித்தவர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறார்கள்.

இதுபற்றிய உரையாடல் வந்தாலும், அது பெரும்பாலும் கேலி கிண்டலுக்கான விஷயமாகவே பார்க்கப்படுகிறது – வரவிருக்கும் நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகப் பார்க்கப்படுவதில்லை. இருப்பினும், எண்ணற்ற புதிய ஆராய்ச்சிகளின்படி, ஆணுறுப்பு பெரும்பாலும் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அளவுகோலாக இருக்கிறது, விறைப்புத்தன்மை குறைபாடு என்பது சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மறதி நோய் உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகளின் முன்னோடியாக செயல்படுகிறது.

இது “வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறி” போன்றது என்று ரோம் டோர் வெர்காட்டா பல்கலைக்கழகத்தின் பாலியல் நிபுணர் இம்மானுவேல் ஜானினி கூறுகிறார், இவர் சமீபத்தில் இன்றுவரையிலான ஆதாரங்களை ஆய்வு செய்யும் ஒரு கல்விசார் புத்தகத்தைத் தொகுத்துள்ளார். விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கான சிறந்த பரிசோதனையின் மூலம், மருத்துவர்கள் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் சில கடுமையான அச்சுறுத்தல்களை அவை மிகவும் முற்றுவதற்கு முன்பே கண்டறிய முடியும்.

ஆனால் தங்கள் பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பேச பல ஆண்கள் தயங்குவது, அவர்கள் இந்த மதிப்புமிக்க வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்பதைத்தான் குறிக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com