ஐபிஎல் அட்டவணையில் மாற்றம்: 10 அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் முழு விவரம் | IPL schedule changes Full details of foreign players playing for 10 teams

Share

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விவரத்தை பார்ப்போம்.

இவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பிய நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மறுத்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்: ஜாஸ் பட்லர், ரபாடா. (இருவரும் லீக் சுற்று வரை விளையாடுவார்கள்) ஷெப்பர்ட் ரூதர்ஃபோர்ட், ரஷீத் கான், கரீம் ஜனத், ஷனகா, ஜெரால்ட் கோட்ஸி, குஷால் மென்டிஸ்.

ஆர்சிபி: ஜேக்கப் பெத்தேல், இங்கிடி (இருவரும் லீக் சுற்று வரை மட்டுமே விளையாடுவார்கள்) ரொமாரியோ ஷெப்பர்ட், பிலிப் சால்ட், டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டன், நுவான் துஷாரா.

மும்பை இந்தியன்ஸ்: வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கல்டன், கார்பின் போஷ் (மூவரும் லீக் சுற்று வரை மட்டுமே விளையாடுவார்கள்). பெவோன் ஜேக்கப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், ரீஸ் டாப்லி, முஜீர், ஜானி பேர்ஸ்டோ, ரீச்சர் கிளீசன். இதில் பேர்ஸ்டோ மற்றும் கிளீசன் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவார்கள்.

பஞ்சாப் கிங்ஸ்: யான்சன் (லீக் ஆட்டங்கள் மட்டும் விளையாடுவார்). ஓவன், அஸ்மதுல்லா ஓமர்சாய், சேவியர், ஜேமிசன்.

டெல்லி கேபிடல்ஸ்: ஸ்டப்ஸ் (லீக் ஆட்டங்கள் மட்டும் விளையாடுவார்). டூப்ளஸி, துஷ்மந்தா சமீரா, செதிகுல்லா அடல், முஸ்தபிசுர் ரஹ்மான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ரஸ்ஸல், டிகாக், ஸ்பென்சர் ஜான்சன், ரஹ்மானுல்லா குர்பாஸ், நோர்க்கியா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: எய்டன் மார்க்ரம் (லீக் சுற்று மட்டும் விளையாடுவார்). மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், மேத்யூ பிரெட்ஸ்கி, ஓரூர்கி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், கமிந்து மென்டிஸ், இஷான் மலிங்கா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஹெட்மயர், பிரிட்டோரியஸ், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஹசரங்கா, தீக்சனா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: நூர் அகமது, பதிரனா, டெவால்ட் பிரெவிஸ், கான்வே.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com